Saturday, February 26, 2005

ஏய் கந்தசாமி!


ஏய் கந்தசாமி,
இங்க வந்து குந்துசாமி,
இளமை என்பான் புதுமை என்பான்,
இப்பவே அனுபவிச்சுடு என்பான்
அப்படி ஒன்னு மட்டும் பண்ணிட்டியோ
நாயேம்பான் பேயேம்பான்
நாலெழுத்து படிச்சிருந்தும் இப்படி
நாலெழுத்து நோய்வந்து சாகப்போறியேம்பான்
அவனே மனசை தேத்தும்பான்
நடக்காதது நடந்துடுச்சும்பான்
நடந்தது நடந்துபோச்சும்பான்
நடக்கிறத நல்லதா பார்த்துக்கோம்பான்
நாக்கு நாலுவிதமாத்தான் பேசும்
அறிவு உனக்கு ஆரம்பத்திலிருந்து வேலை செய்யனும்
நாக்குக்கு பயந்துகிட்டு தூக்குல தொங்குறவனும்
நாய்க்கு பயந்து மரத்துல தொங்குறவனும்
ஒன்னாயிருவானா?
துக்கப்படற மனசுக்கு ஆறுதல் சொல்லிட்டு
தூக்கிகட்டின வேட்டிய இறக்கிவிடு!
போறபோக்குல பொன்னம்மாவ பார்த்தா தப்பில்ல,
ஆனா,
பொன்னம்மாவையே பார்த்திட்டிருந்தா தப்புதான், இல்ல?!

2 comments:

Thangamani said...

நல்லாருக்கு. தொடர்ந்து எழுதுங்க!

J S Gnanasekar said...

கலக்கிட்டீங்க. இன்னும் எழுதுங்க. வாழ்த்துக்கள். நன்றி.