இந்த புதினத்தை வாசிப்பதற்கான மனநிலையை,
இன்னும் சொல்ல போனால், புயலுக்கு முன்னான ஒரு அமைதியை .
நூலில் இருக்கும் ப.சிங்காரம் அவர்களை பற்றிய குறிப்புகளே உருவாக்கி தரும்.
எந்தவிதமான சூழலில் இந்த புதினத்தை சிங்காரம் எழுதி இருக்கிறார் என்பதை அறியும் பொழுது,
அதிலும் குறிப்பாக புதினத்தை படித்து விட்டு யோசிக்கும் பொழுது , வியப்பாக இருந்தது.
யதார்த்தத்தில் மனைவியையும் குழந்தையையும் இழந்து ,
தனிமைக்கு முழு வடிவம் கொடுத்து வாழ்ந்த ஒரு மனிதன்,
எழுத்தில் , இலக்கியத்தில் தன்னைத்தானே மீட்டுக்கொண்டு
புயலிலே ஒரு தோணியை படைத்து விட்டு
மீண்டும் அந்த தனிமையில் உறைந்து ,
மறைந்தும் போய்விட்டான் .